Resource

Kobo Wifi eReader

சூர்யா வித் ப்ரணீதா !

'மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து 'சிங்கம் 2' படத்திற்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. 'சிங்கம் 2' படத்தினை அடுத்து தேதிகள் கொடுத்து இருக்கும் படம் 'துப்பறியும் ஆனந்தன்'.

இப்படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' வெற்றிக் கூட்டணியான கெளதம் மேனன் - சூர்யா மீண்டும் இணைவது தான் இதற்கு காரணம்.

இப்படத்தினை கௌதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமையும் ஆக்ஷன் படம் இது. விஜய்யை வைத்து கௌதம் மேனன் இயக்கும் 'யோஹன்' முடிந்ததும், இப்பட படப்பிடிப்பு தொடங்குகிறது.

படத்தின் நாயகி வேடத்திற்கு கடும் போட்டி நிலவியது. தற்போது அப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார் ப்ரணீதா.

தம்பி கார்த்தியுடன் சகுனி ஆட்டம் ஆடியவர், அண்ணன் சூர்யாவுடன் துப்பறிய இருக்கிறார்.



Share this post :

Post a Comment

Test Sidebar

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamilthandavam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger